சகோ, பிரன்ஹாம் அவர்கள், தான் “கிறிஸ்து அல்ல” என்றும் தெளிவாய் அறிக்கையிட்டு தனது பிரசங்கத்தில் கூறியதன் தமிழாக்கம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முதல் வருகையில் எலியாவின் ஆவியும் பெலமும் உடையவனாய் முன் நடப்பான், முன்னோடுவான் என்று தீர்க்கதரிசிகளால் முன்னுரைக்கப்பட்ட வனாகிய யோவான் ஸ்நானனின் ஊழியத்தின் நாட்களில் மக்கள் அவன் கிறிஸ்துவோ என்று ஐயமுற்றனர். லூக்கா 3:15-ல் 'யோவானைக் குறித்து இவன் தான் கிறிஸ்துவோ என்று ஜனங்களெல்லாரும் எண்ணங்கொண்டு தங்கள் இருதயங்களில் யோசனையாயிருக்கையில் '' என்று வாசிக்கிறோம். ஆனால் யோவானோ அவர்கள் நினைக் கிறபடி, தான் கிறிஸ்து அல்ல என்பதை உறுதியாக காண்பிக்கும்படி, லூக்கா 3:16-ல், ''யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார். அவருடைய பாதரட்சை களின்வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல. அவர் பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்'' என்று தெளிவுபடுத்தினான். A அதே போல், "நீர்யார்'' என்று (யோவான் 1:19) யோவானிடத்தில் ஆசாரியரையும், லேவியரையும் யூதர்கள் அனுப்பிக் கேட்டபோதும், யோவான் ஸ்நானன் யோவான் 1:20-ல் ''அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்று அறிக்கையிட்டான்'' என்று வாசிக்கிறோம். இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? இயேசுவின் முதல் வருகையின் முன்னோடின தூதனாகிய யோவான் ஸ்நானனை கிறிஸ்துவோ என்று மக்கள் சந்தேகப்பட்டனர். ஆனால் தான் அவர் அல்ல என்று யோவான் உறுதிப்பட கூறினான். LILYEN -அதே போல், இயேசுவின் வருகைக்கு எலியா தீர்க்கதரிசி முன்னோடு வான், அவன் செய்தி முன்னோடும் என்று வேத தீர்க்கதரிசிகளாலும் நமது கர்த்தராலும் முன்னுரைக்கப்பட்டபடி (வெளி 10:6; மத்தேயு 17:11; மல்கியா 4:6) எலியாவாக சகோ.பிரன்ஹாம் அவர்கள் வெளிப்பட்ட போது, இவரையும் மக்கள் கிறிஸ்துவோ என்று ஐயமுற்று, அதைக் குறித்து அவரிடம் கேட்டனர்; சிலர் அவ்வாறு விசுவாசித்து எங்கும் அதைக் குறித்து பரப்பினர். ஆனால் சகோ. பிரன்ஹாம் அவர்கள் யோவான் ஸ்நானனைப் போன்று தான் கிறிஸ்து அல்ல என்று திட்டவட்டமாக அறிக்கையிட்டார். மேலும் ஏழு முத்திரைகளின் வெளிப்பாட்டின் இரண்டாம் முத்திரை பாரா42 முதல் 48ல் சகோ.பிரன்ஹாம், "கிறிஸ்து வருவதற்கு முன் பொய்யான வழிகாட்டிகள், கள்ள மேசியாக்கள் எழும்பினர் என்பதை நீங்கள் அறிவீர்களா? அப்போஸ் தலர்களை அடித்துத் துன்புறத்த வேண்டு மென்று தீர்மானிக்கப்பட்ட போது, அக்காலத்தில் யூதமார்க்கத் தின் போதனைகளில் தலை சிறந்து விளங்கிய கமாலியேல் அவர்களிடம், "இவர்களை விட்டு விடுங்கள். இது தேவனால் உண்டாயிருந்தால் நீங்கள் தேவனோடு போர் செய்கிறவர்களாய் காணப்படு வீர்கள், இது தேவனால் உண்டாகவில்லையெனில் ....'' என்றான். மேலும் அவன், ''ஒரு மனிதன் சில நாட்களுக்கு முன்பு 400 பேரை வனாந்தரத்துக்குக் கொண்டு செல்லவில்லையா?'' என்றான். இவ்விதமாக காரியங்கள் நம்மிடம் உண்டு என்றான். இவையெல்லாம் என்ன? உண்மையான ஒன்று வருவதற்கு முன்னால் நிகழும் சம்பவங்கள். இப்பொழுது, பாருங்கள்? சாத்தான் இக்கள்ளப் போதகர்களை எழுப்புகிறான். நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கிற இந்த சாத்தானுடைய புத்தி நுட்பத்தை கவனியுங்கள். நாம், அவன் யார் என்பதை படிப்படி யாக வெளிக்கொணர்கிறோம். வேதத்தின் வாயிலாக அவன் முகத்திரையைக் கிழித்து, அவன் யார் என்பதை நீங்கள் காணும்படியாகச் செய்து கொண்டிருக்கிறோம். செய்யப்பட வேண்டிய காரியமும் அதுதான். அவன் மிக சாமர்த்தியமுள்ளவன். புத்தி நுட்பம் வாய்ந்தவன். உண்மையான ஒன்று வருவதை அவன் காணும்போது அது வருவதற்கு முன்னால் அதை கவிழ்ப்பதற்குத் தன்னால் முடிந்த ஒவ்வொன்றையும் அங்கே எறிகிறான். கடைசி சாட்களில் கள்ளக் கிறிஸ்துக்கள் எழும்புவார்களென்று உங்களுக்குத் தெரியுமல்லவா? எலியாவின் ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, உண்மையாகவே வரவிருக்கின்ற இந்த சகோதரன் இந்த மகத்தான செய்தியை பேசினவுடனே அவர்கள் தோன்றுவார்கள். அவனை ஜனங்கள் மேசியா என்று தவறாக எண்ணக்கூடும். ஆனால் அவனோ , யோவான் ஸ்நானனைப்போல், ''நான் அவரல்ல'' என்று திட்ட வட்டமாகக் கூறுவான். ஏனெனில் அவன் யோவானைப் போலவே வரவேண்டியவனாயிருக்கிறான். யோவான் அங்கே பிரசங்கிக்க வந்த போது, ஜனங்கள், அவனிடம் ''நீ மேசியாவல்லவா? நீ அவரல்லவா?'' என்று கேட்டனர். அதற்கு அவன், 'நான் மேசியா அல்ல. அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்ப் பதற்கும் நான் பாத்திரனல்ல, நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன். அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்' என்றே கூறியுள்ளார். அதுவுமன்றி, ஏழு சபை காலங் களின் வியாக்கியானம் என்ற புத்தகத்தில், லவோதிக் கேயா சபையின் தூதன் என்ற பகுதியிலும் சகோ. பிரன்ஹாம், "லவோதிக்கேயாகால தீர்க்கதரிசி- செய்தி யாளனுக்கும், இயேசுவின் முதலாம் வருகைக்கு முன்னோடியான தீர்க்கதரிசி - செய்தியாளன் யோ வானுக்கும் மற்றுமொரு ஒப்பீட்டை நான் செய்ய விரும்புகிறேன். யோவானின் நாளின்ஜனங்கள் அவனை மேசியா என்று தவறாக எண்ணினர். யோவான் 1: 19-20 "எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவி யரையும் யோவானிடத்தில் அனுப்பி, நீர் யார் என்று கேட்ட பொழுது, அவன் மறுதலியாமல் அறிக்கை யிட்டதுமின்றி நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கை யிட்டான்" இப்பொழுது, இந்த கடைசி நாளின் தீர்க்க தரிசி- செய்தியாளனும் கர்த்தருக்கு முன்பாக மகத்தான வல்லமையை கொண்டிருப்பார். ஆதலால் அவரை (செய்தியாளனை- தமிழாக்கியோன்) கர்த்தராகிய இயேசு என்று சிலர் தவறாக எண்ணுவார்கள். (காலத்தின் முடிவில், அவர்கள் இதை நம்பத்தக்க தாக, பூமியில் ஒரு ஆவி இருந்து அவர்களை வஞ்சிக்கும்). மத் 24: 23-26. "இதோ , கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக் கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசி களும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்ட வர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங் களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ஆகை யால், அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள்; இதோ இரகசிய அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல் வார்களானால் நம்பாதிருங்கள். ஆனால் நீங்கள் அதை நம்பாதீர்கள். அவர் (செய்தியாளன் - தமிழாக்கியோன்) இயேசு கிறிஸ்து அல்ல. அவர் தேவனுடைய குமாரன் அல்ல. அவர் சகோதரர்களில் ஒருவர், ஒரு தீர்க்கதரிசி, ஒரு செய்தியாளன், ஒரு தேவனுடைய ஊழியக் காரன். அவருக்கு மகத்தான கனம் செலுத்தப்பட தேவையிராது. யோவானும் கீர்த்தி எதுவும் தனக்கென்று தேடிக் கொள்ளாமல், "நான் அவரல்ல, எனக்குப் பின் ஒருவர் வருகிறார்'' என்று கூப்பிடுகிற சத்தமாயிருந்தான. சகோ.பிரன்ஹாம் தன்னை கிறிஸ்து என்ற பொய் போத கத்தை பரப்புகிறவர்களின் செயல் பிசாசினுடையது. அது அந்தி கிறிஸ்து, அது கேவலமான பொய், அது சாவுக்கேதுவான காயம் அடைந்தது, எனவே அது ஒழிந்து போகும், அதனோடு எந்தவித சம்மந்தமும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றெல்லாம் கூறிப் பிரசங்கித்தார். அப்பிரசங்கம், ''இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடு' என்ற தலைப்பில் பிரசங்கித்த 15 பிரசங்கங்களில் பதினான்காவதான செய்தியாகும். அதன் தலைப்பு "மிதிக்கப்பட்ட சர்ப்பம்'' என்பதாகும். அச்செய்தியின் 20 முதல் 48 முடிய உள்ள பாராக்களில் தன்னை இயேசு கிறிஸ்து என்று அழைப்பது பிசாசின் பொய்ப் போதகம் என்று தெளிவுபடுத்தி உறுதியாக அறிக்கையிட்டுப் பிரசங்கித்திருக்கிறார். அதன் தமிழாக்கமே இதில் அளிக்கப்பட்டுள்ளது. அது பின்வருமாறு: எனது வாழ்க்கைப் பாதையின் முடிவை நான் போய் அடைகையில் அங்கே என்ன இருக்குமோ என்று நான் அடிக்கடி அறிய விரும்பியதுண்டு. அவ்வேளை எப்பொழுது நேரிடும் என்பதை நாம் அறியோம், நம்மில் எவரும் அறியோம், ஆகவே வாழ்க்கையில் இதுவரை நான் நடந்து வந்திருக்கும் கடந்த கால பாதையை நான் திரும்பிப்பார்த்து அப்பாதையில் நான் வெவ்வேறு குன்றுகளையும், முட்புதர் நிறைந்த பாதைகளையும், பாறைகளையும், கஷ்டமான இடங்களையும், மிருதுவான பயணங்களையும் என் வாழ்வில் கடந்து வந்ததைப் பற்றியும், அவ்விதமான வேளைகளில் நான் என்ன செய்தேன் என்பதையும் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவை யாவும் இந்நாட்களில் ஒன்றில், நான் கடந்து சென்றுவிடும் வேளையில் தெளிவாகத் தெரியவரும். நம் ஒவ்வொருவரிலும் அவ்வாறு தான் சம்பவிக்கும். ஒவ்வொருவருக்கும் அவ்வேளை வரும்பொழுது, அது தெளிவாகத் தெரிய வரும் என்பதைப் பற்றி நாம் யாவரும் நிச்சய முள்ள வர்களாய் இருப்போம். ஒரு குறிப்பிட்ட காரியத்தைப் பற்றி கூறத் தூண்டகிறதாகவோ நடத்துகிறதாகவோ இருக்கிறது; ஆனால் அதைக் கூறுவதை விட ஓடிப் போய்விடலாம் என்று நான் விரும்புகிறேன். ஒரு காரியத்தைக் குறித்துக் கூறும்படி அது என்னை நடத்துகிறது, அதைப் பற்றிக் கூறுவது என் இருதயத்தின் அடித்தளத்தையே நொறுக்குகிறது. ஆனால் நான் என்ன கூறுகிறேனோ, அதைக்கூற வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற் பட்டுள்ளது. இது ஒலிநாடாவில் பதிவு செய்யப் படுகிற தென்றும், அதனால் உலகம் அதைக் கேட்கும் என்பதையும் நான் உணர்ந்தேயிருக்கிறேன். ஆனால் நான் ஒரு காரணத்திற்காக ஊழியத்தை விட்டு விலகி விட்டேன். நான் அக்காரணத்தினால் ஊழியத்தை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டது குறித்து வருந்துகிறேன். நான் எனது அலுவலகத்தை மூடுகிறேன் என்பதைப் பற்றியும், ஊழியத்தை விட்டு விலகு வதைக் குறித்தும் ஒரு வேளை உங்களில் அநேகர் கேள்விப் பட்டிருப் பீர்கள். -நமது கர்த்தர் என்னை எங்கே வழி நடத்துவார் என்பதைப் பற்றி எனக்கே தெரியாது, அது என் கட்டுப்பாட்டில் இல்லை; அல்லது நான் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து அவர் என்னவெல்லாம் சித்தங்கொண்டிருக்கிறாரோ தெரியாது. ஆனால் வாழ்க்கைப் பாதையில் நான் வந்தடைய வேண்டிய இறுதிக் கட்டத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக் கிறேன். என் வாழ்க்கைப்பாதை நெடுகிலும் நான் அநேக பிழைகளை செய்திருக்கிறேன்; அதற்காக நான் உளப்பூர்வமாக வருந்துகிறேன். மானுடனாய் இருப் பதனாலும், ஒரு நபர் மாறுபாடாக நடக்க விரும்பாமல் இருந்துங்கூட, மானுடனாய் இருப்பதிலும், மனுஷ பெலவீனமும் அவ்வாறு காரியங்களை செய்யவோ அல்லது பேசவோ ஆக்கி விடுகிறது என்று நான் கருதுகிறேன். மனுஷ பெலவீனங்களால் நமக்கு அவ்வாறான வேளைகள் ஏற்பட்டு விடுகிறது. என்னுடைய இருதயத்தில் எதாவது விருப்பம் இருக்கிற தென்றால், அதென்னவெனில், எனது இந்த வாழ்க்கைப் பயணத்தின் இறுதியில், ''நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே" என்று நமது கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை நான் கேட்க வேண்டுமென்பது தான். ''என்னிடத்தில் வா'' என்று கூறும்பொழுது, நானும் அங்கே நின்றிருக்க வேண்டுமென்று வாஞ்சிக்கிறேன் என்று நான் அநேக தடவைகள் கூறியிருக்கிறேன். ஆனால், அதைவிட, ''நன்றாகச் செய்தாய் ' என்று அவர் கூறுவதையே நான் விரும்பியிருக்கிறேன். வேதாகமம் எழுதப்பட்ட நாட்களில் ''என்னிடத்தில் வா'' என்கிற சத்ததத்தை நான் கேட்டது கூட இல்லை; ஆனால் ''நன்றாகச் செய்தாய் " என்று அச்சத்தம் என்னிடம் கூறுவதையே நான் கேட்க விரும்புகிறேன். நான் எப்பொழுதும் விரும்பியிருக்கிற காரியம் யாதொன்று இருக்குமென்றால், என் இருதயத்தின் வாஞ்சைகள் என்ன வெனில் என்னுடைய ஆண்ட வரும் இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுக்கு உண்மையான ஊழியக்காரனாக இருக்க வேண்டு மென்பதேயாகும். என்னுடைய சாட்சி சுத்தமான தாகவும், தெளிவானதாகவும் உடையவனாக நான் நிற்க வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். என்னிடம் எத்தனையோ பிழைகள் இருந்தன, ஆயினும் நான் அவரை என் முழு இருதயத்தோடும் நேசித்தேன். இக்காலையிலும் கூட நான் அவரை என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன். ஆகவே தான் நான் ஊழியத்தை விட்டு விலகுகிறேன் என்று கூறும்படி நிர்ப்பந்தப்படுத்தப் பட்டுள்ளேன். ஏனெனில், ஜனங்கள் மத்தியில் ஒரு காரியம் எழும்பியுள்ளது, அதுவே நான் அவ்வாறு . கூறும்படி செய்திருக்கிறது. அதென்னவெனில், நான் ''ஊழியக்காரன்'' அல்லது ''ஒரு சகோதரன்'' என்று அழைக்கப்படும் அடைப்புக்குறியிலிருந்து எடுக்கப் பட்டு, இயேசு கிறிஸ்து என்று அழைக்கப் படுகிறேன். அவ்விதமாக என்னை அழைப்பது என்னை ஒரு அந்தி கிறிஸ்து என்று பட்டம் சூட்டி விடும். நான் அவரை, ஒரு அந்தி கிறிஸ்துவாக சந்தித்து, அவரை விட்டு அகற்றப் படுவதற்கு முன்னர், பணியை விட்டு விலகி ஓடிப் போனவனாகவே சந்திக்க விரும்புகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பாக அதைப் பற்றி என் காதுகளில் விழுந்தது. நான் அதை ஒரு தமாஷ் என்று எண்ணினேன். ஒரு சமயம் மீன் பிடிக்கச் சென்றிருந்த பொழுது, இரண்டு அல்லது மூன்று சகோதரர்களை நான் சந்தித்தேன். அவர்களில் ஒருரைக் கூட நான் இன்று காலைக் கூட்டத்தில் காணவில்லை. அவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி பேசுவதற்காக என்னை அணுகி, ''சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, நீர் அபிஷேகிக்கப் பட்ட மேசியாவாகிய கிறிஸ்துதானே?'' என்று கேட்டார்கள். அவ்விரு சகோதரர்களுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டு, எல்லோரிடமும், ''சகோதரர்களே, என்னால் முடிந்த அளவு நான் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனாக இருக்கவே முயன்றிருக்கிறேன். நீங்கள் அவ்விதமான காரியங்களைக் கூறுவதை நான் விரும்பவே மாட்டேன். அவ்வாறு என்னைப் பற்றி எப்பொழுதுதாவது சொல்லப்படுமென்றால், அப் பொழுது நான் ஒரு தெளிவான மனசாட்சியோடு ஊழியத்தை விட்டு விலகி விடுவேன். அவ்வாறு ஊழியத்தை விட்டு என்னை நீங்கள் போகச் செய்வதால், காலத்தில், நான் ஊழியத்தில் இருந்திருந்தால் என்னால் ஆத்தும ஆதாயம் செய்யப்பட்டிருக்க வேண்டிய ஆத்து மாக்கள் ஒவ்வொருவருக்கும், நீங்களே பொறுப்பாளி களாயிருப்பீர்கள்; என்னை ஊழிக்களத்தை விட்டு விலகிச் செல்லும்படியான நிலைக்கு தள்ளினதற்கும் நீங்கள் பொறுப்பாளிகளாவீர்கள்'' என்று கூறினேன். அத்தோடு அது முடிந்து போகும் என்று நான் எண்ணி னேன். அதன் பிறகும், இன்னும் சில தடவைகளிலும் நான் அதே விஷயத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். ஆனால் அது இவ்வாறில்லை. அன்றொரு நாள் கனடா தேசத்தில் ஒரு சகோதரன் என்னிடம் ஒரு சிறிய டிக்கெட்டை தன் சட்டைப்பையிலிருந்து எடுத்துக் காண்பித்தார். அதில் ''வில்லியம் பிரன்ஹாம் எங்களு டைய கர்த்தராயிருக்கிறார்'' என்று இருந்தது. அவர் வில்லியம் பிரன்ஹாமின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பதாகவும் தெரியவந்தது. அது ஒரு சத்துருவாக இருந்திருந்தால், அது என் சத்துருவாக இருந்திருந்தால், நான் அதை நகைப்புக்கிடமானதாக எடுத்துக் கொண்டிருப்பேன். ஆனால் விலையேறப் பெற்ற, பிரிய முள்ள சகோதரன் ஒருவர் என்னை இயேசு கிறிஸ்து என்று தான் விசுவாசங்கொண்டுள்ளதாகக் கூறி, என்னிடம் தனது பாவங்களையும் தவறுகளையும் அறிக்ககையிட வந்திருந்தார். நான் அந்த கோட்பாட்டினை விசுவாசிக்கிறேனா என்று கேள்வி கேட்டு, வீட்டில் எனக்குக் கடிதங்கள் வந்துள்ளன; சிகாகோ மற்றும் பல்வேறு இடங்களி லிருந்தும், தொலைபேசியின் மூலமும் அதைக் குறித்து என்னிடம் கேட்டனர். நான் கிறிஸ்து என்று கூறுகிறதான எல்லா விதமான கடிதங்களும் தொலைபேசி அழைப்பு மூலம் கூறுவதும் கடந்த சில நாட்களில் எனக்கு வந்துள்ளன. சகோதரரே! அது பிசாசினுடைய பயங்கரமான, வெட்கக் கேடான, தேவபக்தியற்ற ஒரு பொய்யாகும்! பார்த்தீர்களா, நான் உங்களுடைய சகோதரன் என்பதை உணருங்கள். அவ்விதமாகக் கூறுவது எந்த ஒரு நபரையும் ஊழியத் தை விட்டு ஓடிப்போகச் செய்துவிடும். அவ்வாறு கூறுவது, கிறிஸ்துவை நேசிக்கிற எந்த ஒருவனையும் ஊழியத்தை விட்டு ஓடிப் போகச் செய்துவிடும். - ஒரு வருடத்திற்கு முன்பாக நான் முதன்முறை யாக இதைக் குறித்துக் கேள்விப்பட்ட பொழுது, சமீபத்தில் நான் ஆண்டவரிடம் சென்று கேட்டேன். நான் ஆண்டவரை அணுகியபொழுது, அவர் எனக்கு வேதவாக்கியங்களைச் சுட்டிக்காட்டி, அநேக ஆண்டு காலமாக யூதர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியும் வராதிருந்த பொழுது, அவர்களுக்கு யோவான் பிரசங்கித்துக் கொண்டு வந்த பொழுது அவனைக் குறித்து அவர்கள் தங்கள் இருதயத்தில் ஆச்சரியப்பட்டு, யோவான் ஒருவேளை மேசியாவாக இருக்கக்கூடும் என்று தங்கள் மனதில் எண்ணியதைக் குறித்துள்ள விஷயத்தை குறிப்பிட்டார். எனவே அப்பொழுது நான்... அவர்கள் யோவானிடம் போய் அவன் கிறிஸ்து தானா என்று கேட்டபொழுது அவன் தான் கிறிஸ்து அல்ல என்று அறிக்கையிட்டான். அதை நீங்கள் லூக்கா 3ம் அதிகாரம் 15ம் வசனத்தில் காணலாம். ஆகவே அதன் பிறகு, அது ஓய்ந்து விட்டது; ஆகவே அதை அப்படியே விட்டு விட்டேன். ஆனால் அது இந்த அளவுக்கு நீடித்துக் கொண்டே இருக்கும் போது, அதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்று நான் அப்பொழுது அறிந்து கொண்டேன். சபைக்கும் உலகுக்கும் இதுவே எனது கடைசி செய்தியாக இருக்குமானால், எனக்கு ஏற்பட்ட தரிசனமும், நதிக்கரையில் கர்த்தருடைய தூதன் தோன்றி கூறியவைகள் யாவும் சத்தியமாயிருக்கின்றன. அநேக சமயங்களில் மக்கள் என்னை தீர்க்கதரிசி என்று அழைக்கும் போது, அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. ஏனெனில், ஆங்கில ஏற்பாட்டில், "தீர்க்கதரிசி" என்றால் வெறும் ஒரு 'பிரசங்கி' என்றும், "தீர்க்கதரிசனம் உரைப்பவன்'' என்றும், 'வார்த்தையை முன்னுரைப்பவன்' என்றும் பொருள்படும். அப்படி அழைத்தபொழுது நான் ஓடிப்போய் விடவில்லை, ஏனெனில், அதையெல்லாம் நாம் ஏற்றுக் கொள்ள லாம். ஆனால், "அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்து என்று அழைக்கப்படும் நிலைக்கு வரும்போது, அது என்னால் தாங்கிக் கொள்ள முடியாத காரியமா யிருக்கிறது. எனவே என்னால் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை. கனடா தேசத்தில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு, புறப்பட்டுச் செல்லும் போது, தூரத்தில் எஸ்கி மோக்கள் அல்லது சிகப்பு இந்தியர்கள் மத்தியிலும் அவ்விஷயம் பரவியிருக்கக் கண்டேன். ஆகவே அது என்னை முற்றிலுமாக மனமுறி வடையச் செய்து விட்டது. வேட்டைக்குச் செல்ல நீண்டகாலமாகவே நான் திட்டமிட்டிருந்தேன், ஆனால் அதை நான் மேற்கொள்ள இயலாமற் போயிற்று. ஏனெனில் நான் வேட்டைக்கால விபத்தொன்று ஏற்படுமோ என அஞ்சினேன். நான் என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களென்றால், இது உங்களுக்கு புரியம். நான் இப்பொழுது இங்கே நடுக்கத்தோடு நின்று கொண்டிருப்பதைவிட மிகவும் நடுக்க முள்ளவனாக இருந்தேன். முப்பத்தி யொரு ஆண்டுகால ஊழியமானது பிசாசின் சாக்கடை குழாயின் ஆழத்தில் விழுந்து விட்டதே என்று எண்ணு கையில் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் போய்விட்ட பின்பு, அவர்கள் என்னைப் பற்றி என்ன சொல்லுவார்கள்? ''அதோ அவனைப் பற்றி கூறியது முற்றிலும் சரியாகி விட்டது'' என்பார்கள். ஜனங்கள் மேல் எனக்கிருந்த செல்வாக்கெல்லாம் போய், அது ஒரு அந்தி கிறிஸ்துவின் காரியம் என்பதாக ஆகிவிடும். ஆகவே என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடிய வில்லை . "நான் இந்த காட்டிலேதானே என்துப்பாக்கியின் மீதோ அல்லது வேறெதன்மீது விழுந்து இறந்து விடுவதே நல்லது" என்று எண்ணினேன். பிறகு நான் வளர்த்து ஆளாக்கப்பட வேண்டிய என்னுடைய சிறிய மகன் ஜோசப்பைக் குறித்து எண்ணிப் பார்த்தேன். அதற்கு மேல் நான் வேட்டையாடும் நிலையில் இல்லை; எனவே நான் காட்டைவிட்டுப் புறப்பட்டு, வீட்டுக்குத் திரும்பி வந்தேன். எட்டு அல்லது பத்து நாட்களுக்கு நான் மனமுறிவடைந்த வனாக, குழப்பமான சூழ்நிலையில் இருந்தேன். நான் என் சிந்தை தடுமாறுகிறேனோ என்று எண்ணினேன். நான் ஒவ்வொரு வரையும் என்னை விட்டு நீங்கியிருக்கும்படியும் என்னைத் தனியே விட்டு விடும் படியாகவும் கூறினேன், ஏனெனில் நான் தடுமாற்றமான சூழ் நிலையில், பதற்றமுள்ளவனாக, நிலைகுலைந்து, சுக்குநூறாக இதயம் கிழிந்த நிலையில் இருந்தேன். இதையெல்லாம் கூறுவது என்னுடைய சத்துருவாயிருந்தால் அதைப் பற்றி பரவாயில்லை; நான் அதைப் பற்றி கேள்விப்பட்ட மாத்திரத்தில் அதைக்குறித்து நகைத்து, என் வேலையை செய்து கொண்டே இருந்திருப்பேன். ஆனால், இதையெல்லாம் கூறுவது, விலையேறப்பெற்ற சகோதரனோ, விலையேறப்பெற்ற சகோதரி யாகவோ இருக்கும்போது, அதுவே என்னை புண்படுத்துகிறது. "கர்த்தாவே, இவ்விஷயம் என்னால் தாங்கவொண்ணாத காரியமாகும். நான் இதை உம்மு டைய கரத்தில் கொடுத்துவிட்டு, ஊழியத்தை விட்டு வெளிநடப்புச் செய்வதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை'' என்று கூறினேன். சில நாட்களுக்கு முன் ஓர் இரவில், கர்த்தரிடத்தி லிருந்து இதைப் பற்றி நிச்சயமாய் அறிந்து கொள் வதற்காக, ஒரு தரிசனம் உண்டாயிற்று. கருப்பும் மஞ்சள் நிறமுமான அழகான குட்டி சர்ப்பம் ஒன்று என்னைப் பின்தொடர்ந்து வந்து கொண்டே, என் காலில் கடித்தது. ஆனால் எனது இரத்தம் உயர்தரமானதாக இருந்தபடியால், அதன் விஷம் எனக்கு சேதம் ஒன்றும் விளைவிக்க வில்லை. நான் குனிந்து சர்ப்பம் கடித்த இடத்தைப் பார்த்தேன். நான் உடனே திரும்பி துப்பாக் கியை எடுத்து அச்சர்ப்பத்தை சுட்டேன், அதனுடைய நடுப்பாகத்தில் அதற்கு காயம்பட்டது. ஒரு சகோதரன் கூறினார்... நான் என்னுடைய துப்பாக்கியினால் அதன் தலையைச் சுட்டு விடத்திரும்பினபோது, ஒரு சகோதரன் கூறினார், ''அப்படிச் செய்யாதீர்கள், உங்கள் பக்கத்தில் கிடக்கும் அந்த கம்பை எடுத்துக்கொள்ளுங்கள்,'' என்றார். அந்தகம்பை எடுக்கத் திரும்பிய போது, அது தடுமாறிக் கொண்டே வளைந்து வளைந்து ஒரு சிறு குட்டையினுள் போய் விட்டது. ''நல்லது, அது இனிமேல் அதிகம் சேதத்தை விளைவிக்க முடியாது, ஏனெனில் அந்த சகோதரர், அந்த சகோதரர்கள் உணர்வடைகிறதான காரியம் நடக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். அந்த சர்ப்பம் சாவுக்கேதுவாக காயப்படிருக்கிறது. எனவே அது செத்துவிடும்" என்று நான் கூறினேன். எனது சபையின் அங்கத்தினர்கள் அநேக ரையும்.... இந்தக் கூடாரத்தில் சகோ. நெவிலும் நானும் இருக்கையில் கேள்வியோடு இங்கு வந்து என்னை அணுகுகிறவர்களை நான் கேட்கிறேன்: சகோதரர்களே, சகோதரிகளே, நான் உங்களுக்கு முன்பாக கிறிஸ்து வுக்கு உண்மையான ஊழியக்காரனாக நடந்து கொள்ளும்படி முயற்சி செய்ததில்லையா? நான் உங்களுடைய சகோதரனாக இருக்க முயற்சி செய்த தில்லையா? எங்கெல்லாம் இப்போதகம் இருக்கிறதோ, அங்கே அது தானே விலையேறப் பெற்ற மக்கள் மேல் இருக்கும் ஒரு ஆவியாக இருக்கிறது. அநேகர் இதைப் பற்றி என்னிடம் கேட்டிருக்கின்றனர். ஆனால் அது ஒரு ஆவியாக இருக்கிறது. ஆனால், இன்றைக்கு அப்படிப்பட்ட போதகம் சாவுக்கேதுவான காயத்தைப் பெற்றுக் கொள் கிறது, அது விரைவில் மரித்து விடும், எனவே நான் ஊழியத்திற்கு திரும்பி வந்துவிட முடியும் என்று நான் நம்புகிறேன். அது வரையிலும் நீங்கள் ஒவ்வொரு வரும் எனக்காக ஜெபிக்கும்படி நான் கேட்டுக் கொள்வேன். நான் என்ன செய்வேன் என்பது அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனக்கே தெரியாது என் வீடு விற்பனைக்கு உள்ளது. என்னால் இங்கு தங்கியிருப்பேன் என்றால் எனக்கு முழுவதுமாக பைத்தியமே பிடித்து விடும். எனக்காக ஜெபிக்கும்படி உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களாயின், ஞாபக மிருக்கட்டும், நீங்கள் என்னை கிறிஸ்துவின் ஊழியக் காரன் என்று விசுவாசிப்பீர்களாயின் அப்பொழுது ஒரு காரியம் உங்களுக்கு ஞாபகமிருக்கட்டும்; அதென்ன வெனில், ''அப்போதகம் சத்தியத்திற்கு விரோதமாக பிறண்டதாக இருக்கிறது. அது பொய்யானதாக இருக்கிறது கர்த்தர் உரைக்கிறதென்ன வென்றால்; அது முறை தாக இருக்கிறது. அப்படிப்பட்டதோடு எந்தவித சமம் வைத்துக் கொள்ளாதீர்கள். நான் உங்களுடைய சகோதரன்". நாம் தலைகளை வணங்குவோமாக. பரலோகப் பிதாவே, என் மாம்சமானது நடுங்குகிறது; என் கைகள் பிசைகின்றன; என் கால் விரல்கள் என் காலணிகளுக்குள் விறைக்கின்றன. ஓ, தேவனே இரக்கமாயிரும். இது எனக்கு நேரிட நான் என்ன செய்தேன்? நீர் என்னிடத்திலும் எல்லாரிடத் திலும் இரக்கமாயிருக்க வேண்டுமென நான் ஜெபிக்கிறேன். அந்த விலையேறப்பெற்ற இனிய மக்கள், அவர்கள் செய்திருக்கிற நெறி பிறண்ட செயலைக் குறித்து உணர்வடையட்டும், கர்த்தாவே. அவர்களது இச்செயல், தங்கள் சகோதரனின் இருதயத்தையும், தங்கள் சகோதரனை மாத்திரமல்ல, ஆனால் நமது இரட்சகருமாகிய நமது பரம பிதாவின் உள்ளத்தையும் உடைத்ததே. நீர் எங்கள் பிழைகளை எங்களுக்கு மன்னித்தருளும், கர்த்தாவே. கிறிஸ்து வின் பரிசுத்த இரத்தம் எங்கள் ஜீவன்களை ஒன்று சேர்க் கட்டும், கர்த்தாவே. எங்கள் இருதயங்களை கிறிஸ்தவ அன்பிலும், ஐக்கியத்திலும் இணைக்கிற அந்த அன்பின் கட்டு ஆசீர்வதிக்கப் படுவதாக. தேவனே எங்கள் சகோதரர்களையும், எங்கள் சகோதரிகளையும் அக்கள்ளப்போதகத்தோடு அணுகியிருக் கிற சத்துருவானவன் இனிமேலும் நிலைத்திருக்காதபடி சாவுக்கேதுவான காயத்தை பெற்றுக் கொள்ளட்டும்; அது அப்படியே மரித்து போகட்டும், கர்த்தாவே. பிதாவே, நீர் அதைச் செய்யும்பொழுது, நான் ஊழியக்களத்திற்கு மீண்டும் திரும்பி வருவேன். ஆனால் அது வரைக்கிலும் கர்த்தாவே, இருதயம் நொறுங்கின நிலையில் உள்ள உம்முடைய ஊழியக்காரனாகிய நான் காத்துக்கொண்டிருப்பேன். என்னால் எதுவும் செய்யக் கூடியதான நிலையையும் அது தாண்டிப் போய்விட்டது. அதைத் தடுப்பதற்கு என்னால் எதுவும் செய்ய முடியும் என்ற நிலையை அது தாண்டிப் போவதற்கு முன் அதை நிறுத்துவதற்காக நான் கண்ணீரோடும், கதறுதலோடும், புத்தி சொல்லி இணங்க வைக்க நான் மிகவும் கடினமான முயற்சி செய்தேன், நீர் என் இருதயத்தை, கர்த்தாவே, அறிவீர். ஆனால் அது வரம்பு மீறிப் போய்விட்டது, என்னால் இப்பொழுது எதுவும் செய்ய முடியாத நிலை வந்துவிட்டது. எனவே, பிதாவே, அதை நான் உம்முடைய கரத்தில் அநேக ஆண்டுகளாக பிரசங்கித்து வந்த இந்த பிரசங்க பீடத்திலிருந்து ஒப்புக் கொடுக்கிறேன். அதை உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன். இப்பொழுதும் பிதாவே, நீர் உம்முடைய சொந்த தெய்வீக வழியில் அதைக் கவனித்துக் கொள்ளும். அது முற்றிலும் ஒழிந்து போன பிறகு, ஓய்ந்து போன பிறகு, அப்பொழுது உம்முடைய ஊழியக்காரன் ஆகிய நான் ஊழியத்திற்கு திரும்புவேன். அது வரையிலும், நீர் பேசுவதைக் கேட்கும்படி காத்திருப்பேன், கர்த்தாவே. இப்பொழுது எங்களை ஆசீர்வதித்து, எங்களுக்கு இன்றைக்கு மகத்தான ஆராதனையை தந்தருளும். ஏனெனில், நாங்கள் இதற்காக மாத்திரம் இங்கு கூடி வந்திருக்காமல், அதை உலகுக்கு முன்பாக பகிரங்கமாக தெளிவுபடுத்தவும் கூடி வந்திருக்கிறோம். அதனால் அவர்கள், நான் உம்மை நேசித்து, விசுவாசித்து உமக்காக நின்றேன், இன்னமும் நிற்க விரும்புகிறேன் என்பதை அறிந்து கொள்வார்களாக. அடியேன் போய்விட வேண்டு மென்றால், நான் உம்மை விசுவாசித்து உம்மில் நம்பிக்கை கொண்டிருந்ததைப் பற்றிய உண்மையான சாட்சியோடும், சுத்த இருதயத் தோடும் நான் போய்விடட்டும், கர்த்தாவே. அதை அளித்தருளும், வரப் போகும் காலங்கள் நெடுகிலும், நான் உம்மை துதிப்பேன்; நாங்கள் உமக்கு மகிமை செலுத்துவோம். இயேசு கிறிஸ்துவின் மூலமாக. ஆமென். இப்பொழுது நாம் வேதாகமத்தில் ... வேத வசனங்களுக்கு திரும்புவோம். சகோதரன் நெவில் அவர்கள் பொருட்படுத்த வில்லையென்றால், இன்னும் சில நிமிட நேரம் தொடர்ந்திடலாம் என்று நான் இன்று காலை எண்ணினேன். - உங்களில் இனி எவருக்கும் இக்காரியம் பேசப்பட்டு அது என் காதில் வந்து விழ வேண்டாம். ஜெபித்து, அதை தள்ளிவிட்டு, அதைப் பற்றி பேசாதிருங்கள். நான் ஐம்பத்திரண்டு வயதுடைய வனாய் இருக்கிறேன். ஆனால் ஒருவேளை தேவன் என்னை உயிரோடு இன்னும் வைத்திருப்பாரெனில், இன்னும் கொஞ்ச காலம் மாத்திரமே என் ஜீவன் இருக்கும், நான் என்னுடைய நேரம் முழுவதின் ஒவ்வொரு துளியையும் கிறிஸ்துவுக்கென்றே செல வழிக்க விரும்புகிறேன். ஆகவே, நான் ஊழியத்தை விட்டு விலகிச் செல்கிறேன், ஏனெனில் நான் அவ்வாறு செய்யும்படியான கட்டாயத்திற்கு ஆளாக்கப் பட்டிருக்கிறேன். இது உங்களுக்கு ஞாபகமிருக் கட்டும்.